இது அனைவருக்குமான சந்தேகம். இதைப்பற்றி ஒரு வழக்கறிஞரின் ஆலோசனை…
""""ஒருவர் மற்றவருக்கு சொந்தமான இடத்தில், அவருக்கு தெரிந்தே வாடகையோ குத்தகையோ எதுவும் கொடுக்காமல் இருந்தால் 12 வருடங்களுக்கு பிறகு, தக்க ஆதாரங்களை காட்டினால் அந்த இடம் குடியிருப்பவருக்கே சொந்தம் என்கிறது சட்டம். இதை அட்வர்ஸ் பொசஷன் (Adverse Possession) என்பார்கள். மற்றபடி ஒருவர் ஒரே இடத்தில் வாடகை உள்ளிட்டவைகளை கொடுத்துக்கொண்டு இருப்பார் களேயானால், வாடகைதாரருக்கு சொந்தமாகி விடாது.
இப்போது வாடகைதாரர்களுக்குக்கான பிரச்னைக்கு வருவோம்!
சரியான காரணமின்றி வாடகைதாரரை வீட்டு உரிமையாளர் காலி செய்ய சொல்ல இயலாது. மூன்று மாதங்களுக்கு முன்பு தகவல் சொல்லி விட்டுத் தான் காலி செய்ய சொல்ல இயலும். தமிழ்நாடு குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு என தனிச்சட்டமே உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு வாடகை வசூலிக்க வேண்டும் என விதிமுறை உள்ளதோ அவ்வளவு தான் வாடகை வசூலிக்க இயலும். அதை மீறினால் சிவில் கோர்ட்டில் மனு போடலாம். அதேப்போல கூடுதலாக சப் மீட்டர் கட்டணம் வசூலித்தாலும் சிவில் கோர்ட்டுக்கு போகலாம்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சுரேஷ், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். அவருக்கு கல்லூரியின் சூழ்நிலை சரிப்பட்டு வராததால், ஓராண்டுக்கு பின்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் சேர முடிவு செய்து டி.சி கேட்டுள்ளார். ஆனால், நிர்வாகம் இழுத்தடித்தது. சுமார் ஆறு மாதங்கள் கழித்து தான் டி.சி. வழங்கியுள்ளது. இதனால் சுரேஷ்க்கு ஒருவருட படிப்பு வீணானது. ஆதனால் மன உளைச்சல் அடைந்த சுரேஷ் வேலூர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார் அளித்தார். வழக்கை விசாரித்த குறைதீர் மன்றம் பாதிக்கப்பட்ட மாணவருக்கு மன உளைச்சலுக்கு 50,000 ரூபாயும், வழக்கு செலவுக்கு 2000 ரூபாயும் வழங்க கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
சென்னை சுமதி மாணவி ஒருவர் ரஷ்யாவிற்கு சென்று டாக்டருக்கு படிக்க விரும்பினார். அதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்வி ஆலோசனை நிறுவனத்திடம் மூன்றரை லட்சம் கட்டியிருந்தார். இதுமட்டுமின்றி விமான பயணத்திற்கு தனியயக ஒரு லட்ச ரூபாய் கட்டியிருந்தார். ‘பாடங்கள் ஆங்கிலத்தில் கற்றுத் தரப்படும். புத்தங்களுக்கு கட்டணம் இல்லை. நல்ல வசதியான தங்கும் விடுதி. சலுகை கட்டணத்தில் உணவு போன்றவை அந்தப் பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும்.!"" என வாக்குறுதி அளித்து ரஷ்யா அனுப்பியுள்ளது அந்த தனியார் கல்வி நிறுவனம். ரஷ்யா போன பிறகு எல்லாமே தலைகீழ். உணவுக்கான சலுகை கட்டணம் கிடையாது. ரஷ்ய மொழியிலேயே பாடங்கள் அமைந்திருந்தன. பாதுகாப்புக்கும் யாரும் இல்லை. அதனால் மனம் நொந்த மாணவி சுமதி ஆறாவது நாளிலேயே சென்னை திரும்பினார். அத்தோடு நில்லாமல் அந்நிறுவனத்தின் மீது காவல் துறையில் புகார் செய்தார். 86,750 ரூபாய் அந்த நிறுவனம் திருப்பிக் கொடுத்தது. மீதி பணம் தராமல் ஏமாற்றியதால் நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார். ஆணையம் மாணவிக்கு இரண்டு லட்சத்து பதிமூன்றாயிரத்து முந்நூறு ரூபாயும், மன உளைச்சலுக்கு 3 லட்ச ரூபாயும் வழங்க அந்த தனியார் கல்வி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
இதுப்போல, திருவள்ளூர் மாவட்டம் சேர்ந்த திரு.சேட்டு. எம்.பி.ஏ மாணவருக்கு 18 மாதமங்களாகியும் கல்விக் கடன் வழங்க மறுத்த வங்கிக்கு அபராதம் விதித்து, ஆறு வாரங்களுக்குள் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று வங்கிக்கு உத்தரவிட்டதுடன் மன உளைச்சலுக்கு ரூபாய் பத்தாயிரம் வழக்கு செலவுக்கு 2,000 ரூபாய் வழங்க நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டது.
இராணிப்பேட்டை சேர்ந்த சுசிலா நகைக்கடையில் தங்கச் செயின் வாங்கி உள்ளார். அந்த நகையை அணியும் போது, கழுத்தில் குத்தவே அதை சரிச் செய்ய, நகைக்கடைக்கு மீண்டும் சென்று நகையை கொடுத்துள்ளார். அதற்கு அந்த நகைக்கடைக்காரர்கள் பில் கொடுக்காமல் துண்டு சீட்டில் எழுதி கொடுத்துள்ளனர். சரி செய்த உடன் சில நாள் கழித்து அந்த நகையை வாங்கிப் பார்த்த சுசிலா அதிர்ச்சி. 260 மில்லி கிராம் குறைந்திருந்தது. கேட்டபோது ‘நகையை சரிச் செய்தால் சேதாரம் ஆகத்தான் செய்யும். அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம்!’ எனக் கடைக்காரர் பொறுப்பற்ற பதில் கூறவே, நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு புகாராக கொண்டு போனார் சுசிலா கடைக்காரரின் சேவைக் குறைபாட்டை சுட்டிக் காட்டிய குறைதீர் மன்றம் பாதிக்கப்பட்ட சுசிலாக்கு மன உளைச்சலுக்கு 3000 ரூபாய், வழக்கு செலவுக்கு 3000 ரூபாய் 260 மில்லி கிராம் எடைக்குறைவுக்கு 750 ரூபாய் முறையே இரண்டு மாதங்களுக்குள் வழங்க உத்தரவிட்டது.
இதுப்போல எந்த நுகர்வோர் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கும் நாம் புகார் அளிக்க முடியும். மின்சாரம் தொடர்பான மின்சார ஆணையம் நிர்ணயத்திருக்கும் விதிகளுக்கு புறம்பாக மின்சார வாரியம் செயல் பட்டால், நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக மின்சார கட்டணம் வசூலித்தால், உரிய காரணமின்றி அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்தால், உரிய நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க மறுத்தால் நுகர்வோர் மன்றத்தை நாடி தீர்வு பெறலாம். மின்சார வாரியம் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு ஒழுங்கு முறை ஆணையத்திலும் புகார் அளித்து தீர்வு பெற முடியும்.
முகவரி,
மின்சார குறை தீர்ப்பாளர்,
தமிழ்நாடு ஒழுங்கு முறை ஆணையம்,
19-ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை,
எழும்பூர், சென்னை – 600 018.
போன் : 044-28411 376, 28411 378, 28411 379