எந்த அரசு அலுவலகங்களிலும் சென்று விண்ணப்பிக்கத் தேவையில்லை. உங்களது கணினியிலேயே வேலையை சிறப்பாக முடிக்க முடியும்.
அதன் இணையத்தள முகவரி : https://www.tnpds.gov.in/
இந்த இணைத்தளத்திற்கு சென்று உங்களது அத்தனை வேலைகளையும் முடித்துக் கொள்ள முடியும். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த இணையதளம் இயக்கப்படுகிறது. அதனால் கவலையில்லை.
ஸ்மார்ட் கார்டு வாங்க மிகவும் முக்கியமானது உங்களது ஆதார் எண்ணும், மொபைல் எண்ணும்.
ஸ்மார்ட் கார்டில் என்னென்ன தகவல்கள் இடம் பெற்றிருக்கும்?
குடும்பத் தலைவரின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, முகவரி, ஸ்மார்ட் கார்டுக்கான கோடு நம்பர், கார்டின் வகை ஆகியவை கார்டின் முன்புறம் இருக்கும். கார்டின் பின்புறம் குடும்ப உறுப்பினர்கள் பெயர் ரேஷன் கடையின் கோடு நம்பர், ஸ்மார்ட் கார்டின் ணுசு கோடு ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
எத்தனை வகையான ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்?
ஐந்து வகைகள் உள்ளன. முதல் வகை கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவர்கள், முன்னுரிமை கார்டுதாரர்கள் (Primary House Holders) ) இவர்களுக்கு எல்லாப் பொருட்களும் வழங்கப்படும்.
இரண்டாவது வகை : PHHAYY என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவர்கள், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுதாரர்கள் (Primary House Holders and Antyodaya Anna Yojana) இவர்களுக்கு 35 கிலோ அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும். மூன்றாவது கார்டில், NPHH என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவர்கள், முன்னுரிமை அல்லாத கார்டுதாரர்கள் (Non Primary House Holders) இவர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டும். நான்காவது வகை கார்டில், NPHH-S என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவர்கள் முன்னுரி ii இல்லாத கார்டுதாரர்கள் - சர்க்கரை (Non Primary House Holders-S) என்ற வகை. இவர்களுக்கு சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் மட்டும் வழங்கப்படும். ஐந்தாவது வகை கார்டில், NPHH-NC என்று இருக்கும். எந்தப் பொருளும் வாங்க விரும்பாத கார்டுதாரர்கள் (Non Primary House Holders – Non Commodity) ) இவர்கள்.
இணையதள வசதிகள் இல்லாதவர்கள் அல்லது தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
தமிழகம் முழுவதும் உள்ள இ.சேவை மையங்களில் சிறிய அளவு கட்டணம் செலுத்தி, திருத்தங்களுக்கான கோரிக்கைகளை மேற்கொள்ளலாம்.
முகவரி மாற்றம், பெயர் மாற்றம், உறுப்பினர் சேர்த்தல், போன் எண் மாற்றல்.
உங்களுடைய முகவரி மாற்றமோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ சேர்க்க வேண்டியோ அல்லது நீக்க வேண்டியோ இருந்தாலும் https://www.tnpds.gov.in/ இந்த இணையதளத்திலேயே நீங்கள் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். எல்லாவற்றுக்கு இங்கு அடிப்படையாக இருப்பது ஆதார் எண், மற்றும் செல் எண் மட்டுமே. அந்த ஆதார் எண்ணை வைத்துதான் ரேஷன் கார்டில் அல்லது ஸ்மார்ட் கார்டில் திருத்தங்கள் எல்லாம் செய்ய இயலும். குறிப்பிட்ட இந்த இணையதளத்திற்குள் சென்றால, பயனாளர் நுழைவு என்கிற இடம் இருக்கும். இதற்குள் நுழைந்து உங்களுடைய செல் எண்ணை தந்தால் அதாவது ரேஷன் கார்டின் போது நீங்கள் தரப்பபடட செல் எண்ii தந்தால், அந்த செல் எண்ணுக்கு ஒரு ஒன் டைம் பாஸ்வேர்டு வரும். அந்த பாஸ்வேர்டு என்கிற கடவுச் சொல் வைத்து உங்களது கார்டில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.
சரி, நமக்கு இயல்பாகவே ஒரு கேள்வி வரும். அதாவது ஸ்மார்ட் கார்டு வேண்டி விண்ணப்பித்தாலோ அல்லது ஸ்மார்ட் கார்டில் திருத்தங்கள் செய்தாலோ அத்தனையும் கம்ப்யூட்டரை கொண்டு செய்துவிடலாம். திருத்தம் செய்த உடன் புதிய ஸ்மார்ட் கார்டு வர வேண்டுமில்லையா? அது எப்படி நம் கைக்கு வரும் என்கிற குழப்பம் நமக்கு இருக்கலாம்.
இந்த விஷயத்துக்குத் தான் உங்கள் செல்போன் எண் அவசியமாகிறது. அதாவது நீங்கள் புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதே உங்களது செல் எண்ணை கொடுத்திருப்பீர்கள். அந்த செல்லுக்கு திருத்தம் செய்த உடன் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டைப் பற்றிய ததவல் வரும். அந்த தகவலை அரசின் இ.சேவை மையத்தில் காட்டி புதுப்பிக்கப்பட்ட கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் எவ்வளவு முயற்சித்தும் ரேஷன் கார்டு வரவில்லை என்றால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிக்கலாம்? எப்படி?
தகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005
அனுப்புனர்:
தங்கள் முகவரி :
பெறுநர் :
பொது தகவல் அலுவலர் அவர்கள்,
மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகம்,
(தங்கள் மாவட்டம் மற்றும் பின்கோடு)
பொருள் :
தகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005-ன் கீழ் தகவல் பெறுவது சம்பந்தமாக.
ஐயா,
கேள்வி எண் 1 : குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும்? அரசு நிர்ணயித்துள்ள நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படவில்லை என்றால் அதற்கு பொறுப்பேற்கும் அதிகாரியின் பதவி பெயர் என்ன? என்று தெரிவிக்கவும்.
- குடும்ப அட்டை வழங்க தாமதமாக்கும் அரசு அலுவலர்கள் மீது அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கும் எஎனற விபரமும் இது அரசின் எந்த சட்டத்தின் கீழ் வரும் என்ற விபரமும் தெரிவிக்கவும்.
- ஒருவர் தனது குடும்ப அட்டையை தொலைத்துவிட்டால், நகலும் இல்லாத பட்சத்தில் புதிய குடும்ப அட்டை பெற எந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்? அப்படி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைக்கும். இதுக்குறித்து தகவல் தெரிவிக்கவும்.
- ஒருவர் தன்னுடைய பெயரை நீக்கம் செய்ய எந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதோடு என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும் என்ற தகவலை தரவும்.
- எடையில் குறைபாடு, தேவையற்ற பொருட்களை தருதல் போன்ற புகார்களை எங்கு பதிவு செய்ய வேண்டும். அதுக்குறித்த அதிகாரியின் முகவரி தேவை.
- நான் ரேஷன் கார்டுக்கு மூமூமூமூமூமூமூ தேதியில் விண்ணப்பித்தேன். என்னுடைய ரேஷன் கார்டு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவும். நான் விண்ணப்பித்தற்கான ஆதாரத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
- மூமூமூமூமூமூமூமூமூ தேதியிலிருந்து மூமூமூமூமூமூமூமூமூமூ தேதி வரை எத்தனை பேர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தார்கள். அதில் எத்தனை விண்ணப்பித்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்ற விபரமும் தேவை.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005-ன் படி எனக்கு இத்தகவல்களை அளிக்க கேட்டுக்கொள்கிறேன். இந்த விண்ணப்பத்தில் ரூ.10 மதிப்புள்ள கோர்ட் ஃபீஸ் ஸ்மாம்ப் ஒட்டியுள்ளேன். மேலும் இத்தகவலுக்கு ஏதேனும் பணம் செலுத்த வேண்டியிருப்பின் செலுத்த தயாராக உள்ளேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
(உங்கள் கையொப்பம்)
நீங்கள் இந்த மாதிரியான கேள்விகளை, குடும்ப அட்ii புதிதாக விண்ணப்பித்து கிடைக்கவில்லை எனில், அதற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நினைக்க வேண்டாம். குடும்ப அட்டை காணாமல் போய் விண்ணப்பித்து தாமதம் ஆனாலோ, பிழைத் திருத்தம் செய்ய விண்ணப்பித்து நடக்காமல் போனாலோ கூட விண்ணப்பிக்கலாம். நீங்கள் எதற்காக விண்ணப்பிக்கிறீர்களோ அது சம்பந்தமான கேள்விகளை தயார் செய்து அனுப்புங்கள். நீங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்படும் போது உடனடியாக உங்கள் விண்ணப்பங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.