கிராம மேப்
  1. வணக்கம் வருவாய்த்துறையை பொறுத்தமட்டில் எல்லாவற்றுக்கும் தனித்தனி பதிவேடுகள் தான் பராமரிப்பார்கள். ஒரே பதிவேட்டில் எல்லா விவரங்களையும் குறிக்க மாட்டார்கள். ‘அ’ பதிவேடு, அடங்கல், குஆக்ஷ, பட்டா, சிட்டா என பல பதிவேடுகள் இருக்கிறது. அதில் ஒன்று தான் கிராம வரைபடம் என்று சொல்லக்கூடிய Village Map. இந்தக்கிராம மேப்பை வைத்துக்கொண்டு அந்த ஊரின் மொத்தப் பரப்பு, அந்தக் கிராமம் தொடங்கும் இடம், முடியும் இடம், சாலைகள், கிணறுகள், ஏரிகள், ஆழ்துளைக் கிணறுகள், பள்ளிக்கூடம் என எல்லா பொதுப் பயன்பாட்டுக்கு உள்ள பகுதிகளைக் கண்டறிய முடியும். அதேபோல இதில் எந்தெந்த இடங்களுகூகு எந்தெந்த சர்வே எண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனையும் அறியலாம். மொத்தத்தில் ஒரு கிராமத்தின் மொத்தச் சரித்திரம் இந்த மேப்பில் இருக்கும். அதைப்பற்றி தான் இந்தப் பதிப்பில் விரிவாகக் காணப்போகிறோம்.
  2. இந்தக் கிராம மேப் எங்கு கிடைக்கும்?
    உங்கள் ஊரின் கிராம நிர்வாக அலுவலரிடமே கிடைக்கும். அதாது VAO ஆபீஸில் கிடைக்கும். இந்த கிராம மேப்பை எப்படி முறையாக வாங்குவது என்பதைப் பின் வரும் பக்கங்களில் பார்ப்போம்.
  3. இந்த கிராம மேப்பில் என்னதான் இருக்கும்?
    இந்தக் கிராம மேப்பை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு இந்த மேப்பை நாம் இரண்டு வகையாக பிரிப்போம்.
    வருவாய்த்துறையால் பராமரிக்கப்படும் கிராம மேப்.
    முனைககள பிரித்து விற்கும் நிறுவனம் போடும் ப்ளாட் மேப் அதாவது மனைப்பிரிவு வரைடபம்.
    உதாரணமாக, நான் நிலத்தை விற்கும் யீசடிஅடிவநச என வைத்துக் கொள்வோம். நான் ஒரு கிராமத்தில் மூன்று ஏக்கரை வாங்கி, மனைகளை 2400 சதுர அடிகள் வீதம் பிரிக்கிறேன். இடையில் சாலை விடுகிறேன். பூங்கா, விளையாட்டுத் திடல் என எல்லாமும் விடுகிறேன். நான் வாங்கிய நிலம் மூன்று ஏக்கருக்கும் பட்டா இருக்கிறது. இதையெல்லாம் முறையாக பிரித்து அந்த மனை வரைப்படத்தை வைத்து அரசாங்க அங்கீகாரம் வாங்கி நிலத்தை விற்கிறேன். அந்த மூன்று ஏக்கருக்கு நான் போடும் மேப் தான் மனைப்பிரிவு மேப். நான் விடும் சாலைகளெல்லாம் பட்டா நிலமாக இல்லாமல் பொதுப் பயன்பாட்டுக்கு வந்து விடும். இதுவும் பொதுப் பயன்பாட்டுக்கு வரும் நிலங்களெல்லாம் கிராம மேப்பில் மறு சர்வே செய்யும் போது புதுப்பிக்கப்பட்டு விடும். நாம் இந்த மனைகளைப் பிரித்துப் போhடடு விற்கும் மனைகளுக்குரிய மேப்பை பற்றி இந்தப் பதிப்பில் காணப்போவதில்லை. இருப்பினும் நீங்கள் குழம்பிக் கொள்ளக்கூடாது என்பதால் இந்த விஷயத்தையும் சொல்கிறோம். அவ்வளவுதான்!

கிராம மேப்பில் என்ன இருக்கும்?

  1. இந்த கிராம மேப்பில் என்னதான் இருக்கும்?
    உங்கள் வீட்டுக்கும் அருகாமையில் இருக்கும் வீட்டுக்கும் இடையில் ஒரு ஓடைப் போகிறது என வைப்போம். உங்கள் வீட்டு சர்வே எண்.15/1. (நினைவிருக்கட்டும் நாம் சொல்வது சர்வே எண். கதவு எண் அல்ல) அந்த ஓடைக்கு 15/2 சர்வே எண். உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் நபரின் சர்வே எண்.15/3. நீங்கள் சர்வே எண்.15-க்கு உரிய குஆக்ஷ-ஐ பார்த்தால், உங்கள் நிலத்தின் அளவு அந்த ஓடையின் அளவு, உங்கள் அருகாமை வீட்டுக்காரரின் நில அளவு எல்லாம் இருக்கும். அத்தோடு எந்த இடத்தில் அந்த நிலம் வளைகிறது. ஓடை வளைகிறது. எந்த இடத்தில் செங்குத்தாக போகிறது என்றெல்லாம் இருக்கும். குஆக்ஷ என்பதும் ஒரு வகையான மேப் தான்! அளவுகள் மீட்டர் கணக்கில் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த குஆக்ஷ-ல் ஓடை என்றோ உங்கள் பெயரோ அருகாமையில் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரரின் பெயரோ இருக்காது. மாறாக சர்வே எண் மட்டுமே பிரதானமாக இருக்கும். இந்த சர்வே எண்ணில் உள்ளவர் யார்? அவர் பெயர் என்ன? அவர் பட்டா எண் என்ன? நில அளவு என்ன? அந்த சர்வே எண்ணில் ஓடைப் புறம்போக்காக உள்ளதா? வாய்க்கால் புறம்போக்கா என்றெல்லாம் காட்டும் பதிவேட்டுக்கு ‘அ’ பதிவேடு என்று பெயர். இந்த சர்வே எண்ணை வைத்து தான் எல்லாப் பதிவேடுகளும் உருவாகின்றன.

கிராம மேப்பின் ஆரம்ப காலம் எது?
கிராம மேப்பும் அப்படியே! கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே புலன்களின் கூட்டுப்படமாகும். இதில் உட்பிரிவுகள், அளவுகள் இருக்காது. புலத்தின் எல்லைகளும் கிராம எல்லைகளும் வரையப்பட்டிருக்கும். விளக்கிகள் காட்டப்பட்டிருக்கும். (விளக்கிகள் என்றால், ஏரி என்றால் அதற்குரிய படம். கிணறு என்றால் அதற்குரிய படம் போடப்பட்டிருக்கும்) இதனால் புலத்தணிக்கைகள் செய்ய வரும் அதிகாரிகளுக்கு சரியான இடம்தானா? என அடையாளம் காண ஏதுவாக இது இருக்கும்.

  1. இந்த கிராம மேப் எப்போது தயாரிக்கப்பட்டது?
    கிராம மேப் என்றில்லை வருவாய்த் துறை ஆவணங்கள் எல்லாமே நில மேம்பாட்டு திட்டமான 1984 முதல் 1987 வரை நடந்தபோது தயாரிக்கப்பட்டது தான். அதுதான் ஆரம்பம். அதன் அடிப்படையிலேயே எல்லா ஆவணங்களும் இருக்கின்றன். அந்த வரிசையில் இந்த கிராம மேப்புக்கும் நில மேம்பாட்டுத் திட்டம் உருவான ஆண்டையே கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். ஊரின் எல்லையில் எல்லைக் கல் இருக்கும். அந்த ஊரின் எல்லை எங்கு ஆரம்பிக்கிறது. அங்கிருந்து அடுத்த ஊரின் எல்லை எத்தனை கிலோ மீட்டரில் துவங்குகறிது என்றெல்லாம் இதில் இருக்கும். ஒவ்வொரு கிராம மேப்பிலும் அந்த ஊரின் பெயர், அந்த ஊரின் வருவாய்த்துறை கிராம எண், மாவட்டம், தாலுகா, அந்த ஊரின் மொத்த விஸ்தீரண அளவு எல்லாம் இருக்கும். அந்த ஊரின் மொத்த நில அளவுகள் ஹெக்டேரிலும் ஏர்ஸிலும் இருக்கும். உதாரணமாக 715 ஹெக்டேர், 80 ஏர்ஸ் இப்படி இருக்கும். அரசாங்கம் எபோதுமே ஹெக்டேர், ஏர்ஸ் அளவையே பயன்படுத்தும் என பல பதிப்புகளில் நாம் சொல்லி இருக்கிறோம். 1 ஹெக்டேர் என்பது 1,07,600 சதுர அடிகள் ஆகும். 1 ஏர் என்பது 1076 சதுர அடிகள் ஆகும்.

விரிவாக நில அளவைகள் காண்போம்.

1 குழி – 144 சதுர அடி
100 குழி – 1 மா
3 மா – 1 ஏக்கர்
1 ஏக்கர் – 300 குழி
7 ஙூ மா – 1 ஹெக்டர்
20 மா – 1 வேலி
1 ஹெக்டர் – 2 ஏக்கர் 47 சென்ட்
1 காணி – 132 சென்ட் (3 குழி)
1 காணி – 1.32 ஏக்கர்
1 கிரவுண்ட் – 5.5 சென்ட்
1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
1 ஏர்ஸ் – 1076 சதுர அடிகள்
1 கி.மீட்டர் – 3280 அடிகள்
30 சதுர மையல் – 1 டவுன்ஷிப்
640 ஏக்கர் – 1 சதுர மைல்

கிராம மேப்பை எவ்வாறு பெறலாம்?
அப்புறம் பொதுவான விஷயங்களான கோயில்கள், பள்ளிக்கூடங்கள் என்பவைகளை தனியாக கட்டமிட்டு அதன் சர்வே எண்களை குறித்திருப்பார்கள். ஒரு ஊராட்சிக்குள் நிறைய உள் கிராமங்கள் வரும். அந்த உள் கிராமங்களின் சர்வே எண்ணையும் கட்டத்தில் காட்டியிருப்பார்கள். இப்படி தனியாக காட்டப்படுவதால் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அந்த உள் கிராமத்தின் சர்வே எண்களை வைத்து எளிதாக அடையாளம் காண முடியும்.

  1. கிராம மேப்பை எங்கு, எப்படி பெறலாம்?
    தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் சுலபமாக பெற முடியும்.

தகவல் பெறும் உரிiiச் சட்டம் – 2005
(ஒப்புகைச் சீட்டுடன் கொண்ட பதிவுத் தபால்)

தேதி :…………
அனுப்புநர்

(உங்கள் முழு முகவரியை எழுதவும்)

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர் அவர்கள்,
தகவல் பெறும் உரிமைச் சட்டம் - 2005
(உங்கள் ஊரின் வட்டாட்சியர் அலுவலம் முழு முகவரி),

பொருள் : ————— என்கிற ஏரியாவின் கிராம மேப் (ஏடைடயபந ஆயயீ) பெறுவது சம்பந்தமாக.

கிராம மேப்பும் தகவல் சட்டமும்

  1. ————————— மாவட்டம் ———- வட்டம் ————- என்கிற கிராமத்தின் ‘கிராம மேப்’ (ஏடைடயபந ஆயயீ) தரவும். தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் 20.08.2006 தேதியிட்ட அரசாணை எண்.114-ன்படி எனக்கு ஒப்புதல் சீட்டையும் பதிலையும் குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.10/- நீதிமன்ற வில்லை ஒட்டியுள்ளேன், மேலும் தகவலுக்கு பணம் செலுத்த வேண்டியிருப்பின் எத்தனை பக்கங்களுக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டுமென தெரிவித்தால் செலுத்த தயாராக உள்ளேன்.
    இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள,

இந்த மாதிரியை வைத்து உங்கள் ஊரின் கிராம மேப்பை பெற்றுக்கொள்ளலாம்.

மறக்காமல் ரூ.10 மதிப்புள்ள கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் விண்ணப்பத்தின் மீது ஒட்டுங்கள். பதிவுத் தபாலில் ஒப்புகைச் சீட்டுடன் அனுப்புங்கள்.