பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலம் மற்றும் பராமரிப்புச் சட்டம்

Maintenance and Welfare of Parents and Senior Citizen Act, 2007

என்று ஆங்கலித்தில் சொல்லக்கூடிய இந்தச் சட்டம் ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலம் மற்றும் பராமரிப்புச் சட்டம்’ என்று சொல்லப்படுகிறது. இது அமலுக்கு வந்த ஆண்டு 2007.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்புக்காகவும் பராமரிப்புக்காவும் அவர்களின் நல்ல வாழ்வுக்காகவும் மேலும் அவர்களின் தொடர்புடைய உதவிகளுக்காக இந்தச் சட்டம் இயற்றப்படுகிறது. இந்தியக் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று நாடாளுமன்றத்தில் இந்தியக் குடியரசின் 58 ஆம் ஆண்டில் இயற்றப்படுகிறது.

பிள்ளைகள், சொத்து, ரத்தச் சொந்தம் – பொருள் விளக்கம்!
அத்தியாயம் – 1
பிரிவு 1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துகை மற்றும் தொடக்கம்,

  1. இந்தச் சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் மற்றும் நல்வாழ்வுச் சட்டம் 2007 என்று அழைக்கப்படும்.
  2. இது ஜம்மு – காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியா முழுமைக்கும் அளாவி நிற்கும் மற்றும் இந்தச் சட்டம் இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் கூட பொருந்தும்.
  3. மாநில அரசாங்கம் அரசிதழில் அறிவிக்கை வாயிலாக அறிவிக்கும் அத்தகைய தேதியிலிருந்து இந்தச் சட்டம் மாநிலம் ஒன்றில் செயலுக்கு வரும்.

பிரிவு 2. சொற்பொருள் விளக்கங்கள்:-

  1. இந்தச் சட்டத்தில் தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி:-

‘பிள்ளைகள்’ என்பதில் மகன், மகள், பேரன், பேத்தி ஆகியோர் அடங்குவார். ஆனாலும், மைனராக (இளவர்) இருப்பவர்கள் இதில் அடங்க மாவட்டார்கள்.

‘பராமரிப்பு’ என்பதில் உணவு, உடை, வசிப்பிடம் மற்றும் மருத்துவச் செவினமும் உள்ளடங்கும்.

‘இளவர்’ (மைனர்) (ஆinடிச) என்பது இந்திய வயது வந்தோர் சட்டத்தில் உரிமை வயது அடையாதவராகக் கருதப்படும் நபர் எனப் பொருள்படும்.

‘பெற்றோர்’ என்பது தந்தை அல்லது தாய், ஈன்றவர், தத்து எடுத்த அல்லது வளர்ப்புத் தந்தை அல்லது வளர்ப்புத் தாய், நேர்வுக்கேற்ப அவர்கள் தந்தை அல்லது தாய் மூத்த குடிமகனாக இருப்பினும், இல்லாவிடினும் எனப் பொருள்படும்.

‘குறித்துரைக்கப்பட்டது’ என்பது இந்தச் சட்டத்தின் கீழ் மாநில அரசாங்கத்தால் இயற்றப்பட்ட விதிகளில் குறித்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்.

‘சொத்து’ என்பது, ஏதேனும் வகையிலான அசையும் சொத்து அல்லது அசையாச் சொத்து. அந்தச் சொத்து மூதாதையர் சொத்தாகவோ அல்லது தானே ஈட்டிய சொத்தாகவோ, தெளிவாகத் தெரியக்கூடியதாகவோ அல்லது தெளிவாக தெரிய முடியாததாகவோ இருக்கலாம் மற்றும் அத்தகைய சொத்திலுள்ள உரிமைகள் அல்லது நலன்களும் உள்ளடங்கும்.

‘சொந்தம் அல்லது உறவினர்’ எனில் குழந்தை இல்லாத மூத்த குடிமக்களின் சட்டப்பூர்வமான சொத்தை அனுபவத்தில் வைத்திருப்பவர் அல்லது அவர் இறந்த பிறகு சொத்துக்கு வாரிசாகக் கூடியவரைக் குறிக்கும்.

‘முதியவர்’ என்பது அகவை அறுபது நிறைவடைந்த அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் குறிக்கும்.

‘மாநில அரசு’ என்பது ஒன்றிய பிரதேசங்களைப் பொறுத்த வரையில் இந்தியய அரசியலமைப்ப்பச் சட்ட்ம் 239ன் கீழ் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர் எனப் பொருள்படும்.

‘தீர்ப்பாயம்’ (Tribunal) என்பது உட்பிரிவு 7ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட பராமரிப்பு குறைத்தீர்ப்பாயம் எனப் பொருள்படும்.

‘நல்வாழ்வு’ என்பது முதியோர்களுக்கு உணவு, உடல் நலம் பேணுதல், மனமகிழ் மையம் மற்றும் அவசிசிமான இன்ன பிற வசதிகள் எனப் பொருள்படும்.

சட்டத்தின் உரிமை!
பிரிவு : 3 சட்டம் உறுதி நிலைப்பாட்டைப் பெறுதல் :-
Act to have overriding effect
இந்தச் சட்டம் வேறு எந்தச் சட்டத்திலோ அல்லது சட்டத்தின் மூலம் உரவாக்கப்பட்ட அமைப்பாலோ அந்தச் சட்ட ஷரத்துகள் இந்தச் சட்டத்திற்கு புறம்பாக அமைந்த போதிலும் இந்தச் சட்டத்திலுள்ள அனைத்து உரிமைகளும் முழுமையாக உறுதி நிலைப்பாட்டுடன் செயல்படுத்தப்படும்.

இந்தச் சட்டம் பிள்ளைகளுக்கு எதிராக இருப்பதாக கருத வேண்டாம். ஆனால், முதியோர்களுக்கு பெற்றோர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அவ்வளவு தான்! ‘பிள்ளைகளால் தான் பெற்றோர்களுக்கு தொந்தரவா? ஏன், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு தொந்தரவே இல்லையா?’ என்றும் சில வாரிசுகள் கேள்விகள் கேட்கலாம். அப்படி இருக்கும் போது, பெற்றோர்கள் புகார்கள் சொன்னால், அந்த தீர்ப்பாயத்திலேயே விசாரணை நடக்கும் போது, உங்கள் தரப்பு நியாயத்தையும் எடுத்துரைக்கலாம். எதிர் தரப்பினரை விசாரிக்காமல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது. அதே நேரத்தில், அவர்கள் உங்கள் மீது புகார் கொடுத்து விட்டதாலேயே நீங்கள் குற்றவாளி என்று அர்த்தமில்லை. சரி செய்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாகவே கருத வேண்டும். என்றைக்குமே தவறே செய்தாலும் அவர்கள் உயர்வானவர்கள் தான்! பெற்றோர்களுக்கு பிள்ளைகள் தாழ்ந்து தான் ஆக வேண்டும். இதுவே தர்மம்!